×

உதவி சிறை அலுவலர் பதவி 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: உதவி சிறை அலுவலர் பதவிக்கு வரும் 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கை: உதவி சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் உதவி சிறை அலுவலர் (பெண்கள்) பதவிகளுக்கு மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு வருகிற 18ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தெரிவாளர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in -லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது.

மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பில் பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமனம் வழங்கப்படும். மேலும் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. விண்ணப்பதாரர்கள் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. இவ்வாறு் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

The post உதவி சிறை அலுவலர் பதவி 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,CHENNAI ,
× RELATED குரூப் 2ஏ பதவிக்கான சான்றிதழ்...